search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு முகாம்"

    • இலத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • குடிமக்களின் அடிப்படை உரிமைகள் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகள் விளக்கி கூறினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் இலத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் முருகேசன் ஆலோசனையின் பேரிலும் மற்றும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரிலும் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆரிபா தலைமையில் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். பெண் கல்வி, பெண்கள் வேலைவாய்ப்பு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை பற்றி தெளிவாக பொதுமக்களிடம் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி மாணவ -மாணவிகள் விளக்கி கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இலத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் முத்துலட்சுமி செய்திருந்தார். 

    • பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீவநல்லூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • பெண் கல்வி, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து பொதுமக்களிடம் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் விளக்கி பேசினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் உள்ள எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சீவநல்லூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத் தாளாளர் எஸ்.டி. முருகேசன் ஆலோசனையின்படி, எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு உதவி பேராசிரியர் அரிபா தலைமை தாங்கினார்.

    இதில் 10 சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பெண் கல்வி, பெண்கள் வேலைவாய்ப்பு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் விளக்கி பேசினர். இதற்கான ஏற்பாடுகளை சீவநல்லூர் ஊராட்சி தலைவர் முத்துமாரி செய்திருந்தார்.

    • காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லூரியில் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • தமிழக அரசின் வேளாண்மை துறை மற்றும் அதனை சார்ந்த துறைகளின் திட்டங்கள் குறித்து விவசாயிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேளாண்மை துறை மற்றும் என்.எஸ்.எஸ். சார்பில் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார்.

    வேளாண்மை துணை இயக்குனர் குணசேகரன் உதவி இயக்குனர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் வேளாண்மை துறை மற்றும் அதனை சார்ந்த துறைகளின் திட்டங்கள் குறித்து விவசாயிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலி தொடங்கப்பட்டது குறித்தும் இதன் பயன்பாடுகள் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர் வேளாண்மை அலுவலர் கனகராஜ் உழவன் செயலி எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர் செல்வம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • இளம் தம்பதியினருக்கு, குழந்தை பேறு, குழந்தை வளர்ப்பு முறைகள், உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • தம்பதிகளுக்கு விழிப்புணர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் தம்பதிகளுக்கு விழிப்புணர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட திட்ட அலுவலர் ஸ்டெல்லா தலைமை தாங்கினார்.

    பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி, மருத்துவ அலுவலர்கள் டாக்டர் சதீஷ் டாக்டர் மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சமூக நல அலுவலர் சகுந்தலா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், இளம் தம்பதியினருக்கு, குழந்தை பேறு, குழந்தை வளர்ப்பு முறைகள், உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனர்.

    • காளசமுத்திரம் அரசு பள்ளியில் நடந்தது
    • தொற்று நோய்கள் குறித்து விளக்கி பேசினர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மலேரியா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் தமிழரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தொற்று நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இறுதியில் ஆசிரியர் ஜெகன் நன்றி கூறினார்.

    • குடிநீர் வழங்கல் துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • டெங்கு விழிப்புணர்வு முகாமை நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தொடங்கி வைத்து பேசினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த டெங்கு விழிப்புணர்வு முகாமை நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் வசந்தி, துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர்கள் உதயகுமார், மாதேஸ்வரன், தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் கொசுப்புழு உற்பத்தி தடுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் கொசு உற்பத்தி தவிர்ப்பது எளிது, கொசுக்களை கட்டுப்படுத்துவது நம் கையில் உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அத்துடன் கொசு ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    • மதுரையில் பெண்கள் பாலியல் தொல்லை சட்ட விழிப்புணர்வு முகாம் பெட்கிராட் சார்பில் நடந்தது.
    • நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமை தாங்கினார்.

    மதுரை

    மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் பெட்கிராட் இணைந்து "வேலை பார்க்கும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள்" குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் தையல் பயிற்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்க்கும் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமையில் நடந்தது.

    பெட்கிராட் நிர்வாகிகள் சுருளி, சாராள்ரூபி முன்னிலை வகித்தனர். பொருளாளர் கிருஷ்ண வேணி வரவேற்று பேசினார்.

    மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுபட்டியல் வழக்கறிஞர்கள் சத்தியவதி, உமா சங்கர் ஆகியோர் நடை முறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு சட்டப்படி நடவடிக்கையை எப்படி நாம் கையாள வேண்டும் என்று சட்டம் பற்றி பேசினர்.

    தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் வெள்ளைப் பாண்டி இலவச பயிற்சி பெற்ற மாணவ-மாணவி களுக்கு சான்றிதழ்கள், பணி நியமன ஆணை வழங்கி பயிற்சி முடித்த பின்பு வேலைக்கு சென்று குடும்பத் தில் ஏற்படும் பொருளாதார சுமையை குறைத்து தொழில் முனைேவாராக மாற வேண்டும் என பேசினார். துணைத்தலைவர் மார்டின் லூதர்கிங் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் கண்ணன், இந்திரா, ரம்யா, டயானா ஜான்சிராணி, சிவகாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    • தொழில் திட்டத்துக்கு கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்
    • வயது 18 முதல் 55 வயது வயதிற்குள் இருக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட தொழில்மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இம்முகாமில் தருமபுரி மாவட்ட கலெக்டர் தலைமையேற்று கூறியதாவது:-

    தமிழக அரசால் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை தொழில் அதிபர்களாக மாற்றும் பொருட்டு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகாள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு திட்டமாகும். தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தொழில்முனைவேர்களாக உருவாக இத்திட்டம் பெறும் பயனுள்ளதாக அமையும்.

    இம்முகாமில் பங்கேற்றிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் தகுதிவாய்ந்த பயன்பெறும் வகையில் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை

    ஏற்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் நேரடி வேளாண்மை தவிர்த்து பிற அனைத்து உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த உணவுப்பதப்படுத்தல், தென்னை நார் சார்ந்த தொழில்கள், ஆயத்த ஆடைகள் தைத்தல், ரைஸ்மில், என்ஜினியரிங் தொழில்கள், சிலக் ரீலிங், ஸ்பின்னிங் மில், பவர்லூம், கட்டுமானப் பொருட்கள், மளிகைக்கடை, வாணிகப்

    பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற் பயிற்சிக் கூடம், வாடகை கார், ஆட்டோ, லாரி, வேன், பேருந்து, காங்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ், ரிக் போரிங், ரெஃப்ரிஜரேட்ட்ரக் உள்ளிட்ட எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் மொத்த திட்டத் தொகையில் 35% (அதிகபட்சாக ரூ.1.50 கோடி வரை) மானியத் தொகையாக வழங்கப்படும். சொந்த நிதியில் இல்லாமல் வங்கிக் கடன் பெற விருப்பினால், மீதமுள்ள 65% வங்கிக் கடனாகப் பெற உரிய ஆலோசனைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வங்கிக் கடனுக்கு திருப்பிச் செலுத்தும் காலம் முழுமைக்கும் 6% வட்டி மானியமும் வழங்கப்படும். புதிதாக தொழில் தொடங்குவோர் மட்டுமல்லாது, ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்தவும், தொழில் ரீதியாக மேம்படுத்தவும் மானிய உதவி பெறலாம்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த எந்தத் தனி நபரும் மற்றும் முழு உரிமை கொண்ட தனியுரிமையாளர், பங்குதாரர் கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர்களுக்கு கல்வித் தகுதி தேவையில்லை. வயது 18 முதல் 55 வயது வயதிற்குள் இருக்க வேண்டும். தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்புப் பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

    மேலும் www.msmseonline.tn.gov.in/aabcs என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். . எனவே இத்திட்டத்தின்கீழ் பயன்பெறவும், விண்ணப்பிக்கவும் ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழில் முனைவோர்கள் மாவட்ட தொழில் மையத்தை நேரடியாக அணுகி பதிவேற்றம்செய்து கொள்ளலாம். இத்திட்டம் குறித்த தகவல்கள் மற்றும் உதவிகள் பெற 89255- 33941, 89255-33942 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறினார்.

    • கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • அரசின் நலத்திட்டங்கள், விவசாய திட்டங்களை விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.

    காங்கயம் :

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சியை தன்னிறைவு பெற்ற கிராமங்களாகவும், ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி பெற்ற கிராமங்களாகவும் மாற்றுவதே திட்டத்தின் நோக்கம் ஆகும். அந்த வகையில் நேற்று படியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

    ஊரக உள்ளாட்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, பொறியியல் துறை, வருவாய்த்துறை, கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு அரசின் நலத்திட்டங்கள், விவசாய திட்டங்களை விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். இதில் தி.மு.க.தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • உசிலம்பட்டியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
    • கஞ்சா மற்றும் போதை பொருள் வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக உசிலம்பட்டி மதுரை ரோட்டில் தனியார் மகாலில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் மற்றும் உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு ஆகியோர் தலைமையில் உசிலம்பட்டி பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யும் மற்றும் கஞ்சா தொழில் செய்யும் கஞ்சா வியாபாரிகளுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

    போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.

    போதைப்பொருட்களின் உற்பத்தி, நடவடிக்கைகளின் மூலம் நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் எனவும், கஞ்சா மற்றும் போதை பொருள் வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் உசிலம்பட்டி போலீசார் கலந்து கொண்டனர்.

    • சூளகிரி வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • கருந்தழைப்புழு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கப்பட்ட வயல்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம்,சூளகிரி வட்டாரத்தில் தென்னையில் பூச்சி நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    சூளகிரி வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தென்னையில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் காணப்பட்டுள்ளது.

    அதனால் குறிப்பிடத்தக்க அளவு மகசூல் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக கருந்தழைப்புழு, ரூகோஸ், சுருள் வெள்ளை ஈக்கள் மற்றும் காண்டா மிருக வண்டு போன்ற பூச்சிகளும் கேரளா வேர் வாடல் நோய் மற்றும் தஞ்சாவூர் வாடல்நோய் அதிகளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சூளகிரி வட்டாரத்திற்குட்பட்ட மாரண்டபள்ளி, பாத்தகோட்டா, காமன்தொட்டி, ஆழியாலம் ஆகிய கிராமங்களில் கருந்தழைப்புழு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கப்பட்ட வயல்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து அதை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.

    மேலும் மஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகள்( நீளம் 3 அடி, அகலம் 1 அடி) ஏக்கருக்கு 10 என்கிற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் தங்கவைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் ஒட்டுண்ணிகள் பிராக்கான் பிரிவிகார்னிஸ் 1800 எண்கள் ஏக்கர் வீதம் மரத்தின் ஓலையின் அடிப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என்று விளக்கி கூறினார்.

    இம்முகாமில் வேளாண்மை உதவி இயக்குநர் ஜான் லூர்து சேவியர், ஸ்ரீ திவ்யா, இணை பேராசிரியர் மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன் பால சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 600 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    அதில் பல ஊர்களில் நோய் தாக்குதல் தென்படுகிறது. திருப்பத்தூர் வட்டாரத்துக்குட்பட்ட பெருமாபட்டு, இருனாப்பட்டுகிரா மங்களிலும், கந்திலி வட்டாரத்துக்குட்பட்ட மட்றப்பள்ளியிலும் சிவப்பு கூண் வண்டு தாக்கப்பட்ட தென்னைகளை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    அதைத்தொடர்ந்து அவற்றை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர்.

    இந்த விழிப்புணர்வு முகாமில், தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் திலகம், வேளாண் உதவி தரக்கட்டுபாடு அப்துல்ரகுமான், கந்திலி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராகினி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ×